யாழில் ரயில் விபத்து! ஒருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு வயோதிபர் ஒருவா் பலியாகியுள்ளார்.

யாழ்ப்பாணம் நெடுங்குளம் பகுதியில் அதே இடத்தினைச் சேர்ந்த தயா என அழைக்கப்படும் 55 வயதுடைய வயோதிபர் ஒருவரே பலியாகியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று(02-04-2018) இரவு 7 மணியளவில் புறப்பட்ட இரவு தபால் சேவை புகையிரதம் புங்கன்குளம் புகையிரதம் தாண்டிப் பயணித்துக்கொண்டிருந்த போது, பொதுமக்கள் பாவனைக்குட்படுத்தப்படாத புகையிரத கடவையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சீவல் தொழில் செய்யும் இந்த வயோதிபர் தனது சிறு மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த போது, தனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள புகையிரத கடவையினை கடக்க முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.