மறைவின் பின்னர் ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான விருது!

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

அவர் இறுதியாக நடித்த மாம் திரைப்படத்திற்காகவே இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 65ஆவது தேசிய திரைப்பட விருது (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டது.

இதன்போதே சிறந்த நடிகராக ரிதிசென்னும், சிறந்த நடிகையாக சிறிதேவியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீதேவியின் ரசிகர்களுக்கு அவரின் மரணம் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் குறித்த விருதானது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.