சமத்துவமின்றி நல்லிணக்கம் சாத்தியமில்லை!

சமத்துவமின்றி நல்லிணக்கம் சாத்தியமில்லை!

இந்த நாட்டு மக்களிடையே சமத்துவம் ஏற்படாமல், நல்லிண்ணம் சாத்தியமில்லை என்றும், சமத்துவமின்றி ஐக்கியம் ஏற்படாது என்றும், தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

சகவாழ்வு அமைச்சராக தமிழரை நியமித்துவிட்டோம். அதனால் நாட்டில் சகவாழ்வும் சமத்துவமும் உள்ளதென அரசாங்கம் தன்னை வைத்து புள்ளிப்போட்டுக்கொள்ள முடியாதென்றும் ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் தன்னை வைத்து விளையாட்டுக் காட்ட முடியாதென்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

தேசிய சகவாழ்வு அமைச்சின் ஏற்பாட்டில் இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய சித்திரை புத்தாண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

அத்தோடு, வடக்கு கிழக்கு மக்களின் அபிலாஷைகள், துன்பங்கள் துயரங்கள், கஷ்டங்களை மட்டுமன்றி, அவர்களுடைய ஆத்திரங்கள், கோபங்கள் மற்றும் கேள்விகளையும் சிங்கள மக்கள் மத்தியில் சிங்கள மொழியில் தான் கொண்டுசெல்வதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளையும் அபிலாஷைகளையும் சிங்கள மக்கள் புரிந்துகொள்ள செய்யவேண்டுமென குறிப்பிட்ட அமைச்சர், இப்பணியை தான் முடிந்தவரை செயற்படுத்தி வருவதாக மேலும் தெரிவித்தார்.