புத்தாண்டில் பாதிப்புகள்! 379 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டாங்களின் போது ஏற்பட்ட பல்வேறு விபத்துக்கள், வன்முறைகள், அசம்பாவிதங்களால் 379 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் இச்சம்பவங்கள் இடம்பெற்றதாகவும், குறிப்பாக விபத்துக்களை பொறுத்தவரை கடந்த வருடத்தை விட இவ்வருடம் மூன்று வீதம் குறைவடைந்துள்ளதென்றும் குறிப்பிட்டுள்ளார்.

விபத்துக்களில் காயமடைந்து 121 பேரும் சிறு பிரச்சினைகள் காரணமாக 38 பேரும் வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டு 56 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பட்டாசு வெடிப்புச் சம்பங்களில் இம்முறை ஒருவர் மாத்திரமே காயமடைந்துள்ளமை பதிவாகியதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒப்பீட்டளவில் கடந்த வருடத்தை விட இவ்வருடம் பாதிப்புக்களின் அளவு குறைவடைந்துள்ளது.