கல்லடி வாவியில் விழுந்த இளைஞன் மாயம்!

மட்டக்களப்பு, கல்லடி வாவியில் விழுந்து காணாமல் போன இளைஞரை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மட்டக்களப்பு, இருதயபுரத்தைச் சேர்ந்த 43 வயதுடைய இளைஞரே காணாமல் போயுள்ளார்.

குறித்த இளைஞரைத்தேடும் பணிகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சம்பவத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை