டோனிக்கு சொக்லேட்டில் சிலை!

டோனிக்கு சொக்லேட்டில் சிலை!

ஐ.பி.எல். தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இரண்டு வருடங்களுக்குப் பின்னர் சென்னை அணி டோனி தலைமையில் விளையாடுகின்றது. இந்நிலையில் டோனிக்கு சொக்லேட்டில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அமைந்துள்ள சொக்லேட் நிறுவனமொன்று இந்த சிலையை வடிவமைத்துள்ளது.

386 கிலோ கிராம் எடையில் 5 அடி 9 அங்குலத்தில் டோனியின் உருவச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிலையை அடுத்த மாதம் சென்னை ஆர்.கே. நகரில் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக குறித்த சொக்லேட் நிறுவனம் தெரிவித்துள்ளது.