அரசாங்கத்திற்குள் இனவாதிகள்!

மஹிந்த ஆதரவு பொது எதிரணியில் மத்திரமல்ல, அரசாங்கத்திற்குள்ளும் இனவாதிகள் உள்ளனர் என தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற தேசிய சித்திரைப் புத்தாண்டு விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவ்வாறு அரசாங்கத்திற்குள் இனவாதிகள் இல்லை என்றால் ஜனாதிபதியும் பிரதமரும் தன்னிடம் கூறலாம் என்றும், அதற்கு தான் பதிலளித்துக்கொள்வதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு, இலங்கையர் என்று கூறினால் சிலர் கோபப்படுவதாக குறிப்பிட்ட அமைச்சர், இலங்கையர் என்ற அடையாளத்திற்குள்ளேயே சகல விடயங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

இலங்கையர் என்றால் தமிழர் என்ற அடையாளத்தை அழிப்பதாக சிலர் நினைப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அது தவறான அர்த்தம் என்றும் இலங்கையர் என்ற அடையாளத்தை அழிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்றும் இதன்போது குறிப்பிட்டார்.