8-வது முறையாகவும் பாடகர் ஜேசுதாசுக்கு தேசிய விருது!

8-வது முறையாகவும் பாடகர் ஜேசுதாசுக்கு தேசிய விருது! 8-வது முறையாகவும் தேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கும் பாடகர் கே.ஜே.யேசுதாசுக்கு சென்னையில் பாராட்டு நிகழ்ச்சி நடத்தபட்டுள்ளது.

இந்திய பின்னணிப் பாடகர்கள் காப்புரிமை சங்கம் சார்பில் பாடகர்களுக்கு ரூ.51 லட்சத்து 77 ஆயிரத்து 704 உதவித்தொகை வழங்கும் விழாவும் 8-வது முறையாக தேசிய விருது பெற்றுள்ள பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாசுக்கு பாராட்டு நிகழ்ச்சியும் சென்னையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கே.ஜே.ஜேசுதாஸ் கலந்து கொண்டு கேக் வெட்டியதுடன், பாடகர்கள் அவருக்குப் பூங்கொத்து வழங்கித் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இதன்போது நிகழ்வில் உரையாற்றிய கே.ஜே.ஜேசுதாஸ், ‘தேசிய விருதை 8-வது முறையாக பெறுவது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. இதற்காக அனைவருக்கும் நன்றி.

பாடல்கள் பாடும்போது பணம் எவ்வளவு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது இல்லை. சுருதி, உணர்வுகள் பாடலில் நன்றாக இருக்கிறதா என்றுதான் யோசிப்பேன்.

அப்போதுதான் சரஸ்வதி கூடவே இருப்பாள். பாடகர்களுக்கு உதவித்தொகை கிடைப்பதன் மூலம் மரியாதை வந்து இருக்கிறது. பாட்டுத்தொழிலை தியானமாகப் பாவித்து செய்தால் எல்லாமே தேடிவரும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.