கனடாவில் உள்ள வீதிக்கு பிரபல தமிழனின் பெயர்!

கனடாவில் உள்ள வீதிக்கு பிரபல தமிழனின் பெயர்!

கனடா, ஒன்ராரியோவில் உள்ள ஒரு வீதிக்கு உலகப் பிரபல தமிழ் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

‘அல்லா-ராகா ரஹ்மான் வீதி’ என அந்த வீதிக்குப் பெயரிடப்பட்டுள்ளது.

சிறுவயதிலிருந்து தனது திறமை உழைப்பால் முன்னேறி இன்று உலகளவில் பெருமைபெற்றதுடன் ஒஸ்கார் விருதையும் ஏ.ஆர்.ரஹ்மான் வென்றார்.

உலகின் பல மொழிகளில் இசையமைத்துள்ள ரஹ்மான் தனது புகழை தலையில் ஏற்றிக்கொள்ளாது எல்லாப் புகழையும் இறைவனுக்கே அர்பணிக்கும் பண்பு அவரை மேன்மைப்படுத்தியது எனலாம்.

இவ்வாறிருக்க ஒரு தமிழனின் பெயர் கனடாவில் சூட்டப்பட்டிருப்பது பெருமைக்குரியதாகும்.